Friday 26 August 2016

இயக்குனர் ராமண்ணா வை பின்னால் இருந்து இயக்கியவர் முன்னாள் நடிகையும் ,அவரது மனைவி யான பி .எஸ்.சரோஜா




இயக்குனர் ராமண்ணா வை பின்னால் இருந்து இயக்கியவர் முன்னாள் நடிகையும் ,அவரது மனைவி யான பி .எஸ்.சரோஜா 





எம். ஜி. ஆருடன் கத்தி சண்டை போட்ட பி. எஸ். சரோஜா


என் கணவர் இயக்கிய படங்களில்
 ‘வாழ பிறந்தவள்’, 
‘பெரிய இடத்துப் பெண்’,
 ‘பணக்காரக் குடும்பம்’,
 ‘குலேபகாவலி’,
 ‘பாசம்’, 
‘காத்தவராயன்’,
 ‘கூண்டுக்கிளி’, 
‘தங்கச் சுரங்கம்’, 
‘நான்’, 
‘மூன்றெழுத்து’,
 ‘புதுமைப் பித்தன்’, 
‘சொர்க்கம்’,
 ‘பறக்கும் பாவை’,
 ‘நாடோடி’, 
‘என்னைப்போல் ஒருவன்’ இதெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள் எந்த ஒரு படமானாலும் கதைகளிலும், காட்சிகள் அமைப்பிலும் வித்தியாசமாக ஏதாவது செய்யணும்னு என்னுடைய கணவர் நினைப்பார்.


‘அன்று வந்ததும் அதே நிலா’ அப்படிங்கிற பாடல் காட்சிக்கு எம். ஜி. ஆர். பேண்ட், கோட், ஸ¥ட் போட்டு, வெஸ்டர்டன் டான்ஸ் ஆட வைக்க முயற்சித்தபோது எம். ஜி. ஆர். இதையெல்லாம் என்னோட ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு பிடிவாதம் பிடித்தார். 

அதற்கு என் கணவர், விடாப்பிடியாக எம். ஜி. ஆரைத் தன்னுடைய கற்பனைப்படியே உடைகள் அணிவித்து, நடனம் ஆட வைத்து படம் பிடித்தார். பாட்டும், அந்தக் காட்சியும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதற்குப் பிறகு எல்லா இயக்குநர்களும் தங்கள் படங்களில் எம். ஜி. ஆரை வைத்து ஒரு வெஸ்டர்ன் நடனப் பாடல் அமையும்படி பார்த்துக்கொள்வார்கள். ‘நீங்க ஆரம்பிச்சு வைச்சிங்க எல்லா இயக்குநர்களும் அதையே பிடிச்சுக்கிட்டாங்க....’ன்னு எம். ஜி. ஆர். என்னிடமும் என் கணவரிடமும் சொல்லி மகிழ்ந்தார். 



அப்போதும் சரி, இப்போதும் சரி என் கணவரை நான்தான் இயக்குநராக்கினேன் என்ற பெருமையும் சந்தோஷமும் என் மனதிற்குள் நிறைந்திருக்கிறது.

எங்களுடைய தயாரிப்பில் வரவு செலவு கணக்கு பணப்பட்டுவாடா இதையெல்லாம் நான்தான் கவனித்துக் கொண்டேன். உழைத்தவர்களின் வியர்வை நிலத்திலே விழுவதற்குள் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிடுவேன். 

எங்களுடைய நிறுவனத்தின் படங்களில் நடித்த 
எம். ஜி. ஆர்., சிவாஜி, &ஜயலலிதா, சரோஜா தேவி, ராமச்சந்திரன் இப்படி எல்லோருக்கும் அவர்களுடைய வீட்டிற்கே போய் பணத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டு வருவேன். அவர்கள் எல்லோரும், இதைப் பார்த்து ஆச்சர்யமும், சந்தோஷமும் அடைவார்கள்.

தோட்டக் கலையில் எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு.
தாம்பரத்தில் 18 ஏக்கரில் பழங்கள், காய்கறிகள், மலர்கள் என்று எல்லா வகையானவற்றையும் பயிரிட்டு தனி கவனம் செலுத்துவேன். 


அடையாரில் இருந்தபோதும், தி. நகரில் வசித்த போதும் வீட்டிலேயே காய்கறி, பழங்கள் பயிரிட்டு வீட்டுக்குத் தேவையானவைகளைப் பயன்படுத்தி வந்தேன். 

1957 களில் மலர் கண்காட்சி போட்டிகளில் கலந்துகொண்டு விருது வென்றிருக்கிறேன்.

என்னுடைய தோட்டக்கலை பராமரிப்பில், நிர்வாகத் திறமை, நடிப்புத் திறமை, கதைகளைக் கேட்டு தேர்வு செய்து நடிப்பது போன்றவற்றையெல்லாம் என்னுடைய கணவரின் சகோதரி டி. ஆர். ராஜகுமாரி உடனுக்குடன் கூப்பிட்டு பாராட்டி மகிழ்வார். 


அருணகிரிநாதர் படத்தில் டி. எம். எஸ்.ஸின் அக்காவாக நடித்த காட்சிகளில் ‘தம்பி திருந்துவதற்காக ஒரு காட்சியில் நான் பேசி, நடித்ததைப் பார்த்து படப்பிடிப்பில் இருந்தவர்கள் எல்லோரும் அழுதே விட்டார்கள். படத்தைப் பார்த்துவிட்டு டி. ஆர். ராஜகுமாரியும் அழுது, புலம்பி என் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். இதை என் வாழ்னாளில் என்றுமே மறக்க முடியாதது.

புதுமைப்பித்தன்’ படத்தில் என்னோடு எம். ஜி. ஆர். கத்தி சண்டை போடும்படியா காட்சி ஒன்றை என் கணவர் ஏற்பாடு செய்துவிட்டார். முதலில் எம். ஜி. ஆர். தயங்கினார். ‘ஒரு பெண்ணோடு கத்தி சண்டை போட வேண்டாம்...’ என்று கூறி, மறுத்தார். இது காட்சிக்குத் தேவை, நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இதில் இடது கையால் கத்தியைப் பிடித்து அவரோடு சண்டை போடுங்கள் பிரமாதமாக இருக்கும். 


உங்கள் ஸ்டைலில் இருந்து இது வித்தியாசப்படும் என்று சண்டைக் காட்சிக்கு விளக்கம் கூறி என்னுடைய கணவர், எம். ஜி. ஆரை சம்மதிக்க வைத்தார்.
நானும் சண்டைப் பயிற்சி மாஸ்டரிடம் நன்றாக பயிற்சி எடுத்துக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்தேன். உண்மையிலேயே அந்தக் காட்சி எனக்கும் எம். ஜி. ஆருக்கும் நல்ல பெயரை தேடித்தந்தது. 

‘கூண்டுக்கிளி’ படத்தில்


 எம். ஜி. ஆர்., சிவாஜி இருவரையும் வைத்து நாங்கள் படம் எடுக்கும்போது அதில் எல்லோரும் உற்சாகமாக நடித்தார்கள். 

வித்தியாசத்தை விரும்பும் என் கணவர் சிவாஜியை எம். ஜி. ஆருக்கு வில்லனாக நடிக்க வைத்தார். என் கணவரிடம் அவர்கள் அண்ணன் தம்பி போலத்தான் பழகி வந்தார்கள். எதைச் சொன்னாலும் அதைச் செய்து கொடுத்தார்கள். இந்தப் படத்தில் இரு திலகங்களையும் சேர்த்து, நடிக்க வைத்த பெருமை என்னுடைய கணவரையே சாரும். சினிமா வரலாற்றில் எங்கள் தயாரிப்பில் ‘கூண்டுக்கிளி’ நிலையானதொரு இடத்தைப் பிடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்!


எங்களுக்கு 
கலாராணி, 
கணேஷ், 
சாந்தின்னு மூன்று செல்வங்கள். 
பேரன், பேத்திகள் ஆறு பேர். 
1997 ல் என் கணவர் இயற்கை எய்தினார். 
அதற்கு முன்பே நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். 

முக்கியமான திரைப்பட விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் யாராவது கலந்துகொள்ளும்படி வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே சென்று வருகிறேன். எனக்கு தெய்வ பக்தி உண்டு. அடிக்கடி உள்ளூர், வெளியூர்களில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்று கடவுளை தரிசனம் செய்து வருகிறேன்’ என்று இனிக்க இனிக்க கூறினார்.



B. S. Saroja was an Indian actress in Malayalam movies and Tamil movies.[1] She is the daughter of Johnson, who acted in the first Malayalam film, Vigathakumaran.[2]
B. S. Saroja
PSSaroja.jpg
B. S. Saroja in 1949 film Deva Manohari
Born18 November 1929
Thiruvananthapuram
NationalityIndian
OccupationFilm actor
Years active1951–1978
Spouse(s)T. R. Ramanna
ChildrenGanesh, Kalarani, Shanthi
RelativesT. R. Rajakumari (sister-in-law)

Personal life[edit]

She was born to Johnson and Rajalakshmi at Thiruvananthapuram in 1922. She studied till fourth form. Then she joined a circus company, with which she traveled all over India. Then she acted in a Tamil movie as a junior artist. Jeevitha Nouka was her first Malayalam movie.[3] She went on to act many movies after that.[4] She was married to late T. R. Ramanna in 1949, a sound engineer turned movie director in Tamil movies. The couple started three cinema production companies known as R.R.Pictures, Vinayaga Pictures and Ganesh Pictures. They have three children. They are settled at Chennai.[







No comments:

Post a Comment