Friday, 26 August 2016

கே. வி. மகாதேவன் ஒரு இசை சரித்திரம்கே. வி. மகாதேவன் ஒரு இசை சரித்திரம் 

கே. வி. மகாதேவன் (மார்ச் 14, 1918 - சூன் 21, 2001), ஒரு தென்னிந்தியத் 
திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 
1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.


திரை இசையில் சாஸ்திரிய இசை (செவ்வியல் இசை), நாட்டுப்புற இசை, மெல்லிசை என்று பல அம்சங்கள், தேவைக்கு ஏற்றவாறு வழங்கும்.
இவை ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்து, பாடல் வரிகளில் பொதிந்த உணர்வுகள் வெளிப்படும்படியும், பாடலில் இனிமை மேலோங்கும் வண்ணமும் இசை அமைத்தவர், இசை மேதை, 'திரை இசை திலகம்' கே.வி.மகாதேவன். 

தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார்.  

.இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர்.  ஆண்டவன் சன்னிதியில் இசை சமர்ப்பித்தவர். மாதம் மூன்று ரூபாயும், 20 படி அரிசியும் தான் சம்பளம்சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.

பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்


அறுபதுகளில் எழுந்த புராண பட வரிசைக்கு, நாடக இசையின் தொடர்ச்சியாக, வெற்றிகரமான பாரம்பரிய இசை தந்தவர் அவர். மகாதேவ ராகத்தில் தானே, 'திருவிளையாடல்' நடந்தது! 'தில்லானா மோகனாம்பாள்' திரையில் ஆடியபோது, தஞ்சை தரணியின் நாயன மணத்தோடும் சதிரின் எழிலோடும் சங்கீத மூர்ச்சனைகளைப் படித்தவர், 'மாமா!'நலம் தானா என்று, சிக்கில் சண்முகசுந்தரத்திடம் அன்று மோகனாம்பாள் கேட்டதில் உள்ள கரிசனை, தமிழகம் எங்கும் இன்றும் ஒலிக்கிறதென்றால், அது நெஞ்சில் இருந்த கனிவு, பண்ணில் விளைந்ததால் தான். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், 'பா' வரிசைப் படங்களில் மெல்லிசை அலை எழுந்தபோது, 'வா, நானும் வருகிறேன்' என்று கைகோர்த்தவர் மகாதேவன். 


இதய கமலம் படத்தில் (1965) அவர் வடித்த இனிய நாதங்கள், இன்றளவும் வசீகரம் குன்றாத ஒலிச்சிற்பங்கள். இப்படி எத்தனையோ!
மகாதேவனை குறைந்தது, மூன்றாவது தலைமுறை இசைக்கலைஞர் என்று கூற வேண்டும். கடந்த, 1920ல் பிறந்த மகாதேவனின் இசைப் பாடங்கள், முதலில் அப்பாவிடம் தான் துவங்கின. பிறகு, அப்பாவே தேர்ந்தெடுத்த பூதப்பாண்டி அருணாசல அண்ணாவியிடம் சென்று, குருகுல முறையிலே சில ஆண்டுகள் இசை பயின்றார். 

தனது ௧௩வது வயதில்(15), ஸ்ரீபால கந்தர்வகான சபாவில் சேர்ந்தார் அன்றைய சூழ்நிலையில், இசை அறிந்த ஏழைப் பையன்களுக்கு, பாய்ஸ் கம்பெனிகள் தான் சரணாலயம். மேற்படி சபா அவரை, சென்னையில் அனாதையாக விட்டதால், யானைகவுனியில் ஒரு ஓட்டலில், பில் தொகையை உரக்கக் கூவும் பையனாக வேலை பார்த்தார்.


மாடர்ன் தியேட்டர்சில் சேர்ந்து, 
1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார். மதன மோகினி திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடினார்.
ஆனந்தன் அல்லது அக்னி புராண மகிமை (1942), 
பக்த ஹனுமான் (1944), 
தன அமராவதி (1948) ஆகிய படங்களுக்குப் பிறகு, வாய்ப்புகள் அற்றுப் போயின. எச்.எம்.வி., நிறுவனத்தில் சில ஆண்டுகள், இசை அமைப்பாளராகப் பணியாற்றினார்.


ஐம்பதுகளில் நிலைமாறி, பல வெற்றிகள் குவிந்தன. 
டவுன் பஸ் (1955), 
முதலாளி (1957), 
மக்களைப் பெற்ற மகராசி (1957), 
தை பிறந்தால் வழி பிறக்கும் (1958), 
சம்பூர்ண ராமாயணம் (1958) போன்ற படங்களின் பாடல்கள், இன்றும் மக்கள் இசையாக உலவி வருகின்றன.


எம்.ஜி.ஆரின் திரைப் பயணம் நெடுக, மகாதேவனின் இசைத் தடங்கள் பதிந்தன. மெட்டுக்குப் பாடல் என்றில்லாமல், பாடலுக்குப் பொருத்தமான மெட்டு, வாத்திய இசை என்று  மகாதேவன் செயல்பட்டதால், அவர் இசையில் மருதகாசியின் பாடல்கள் மணம்பரப்பின, 

கண்ணதாசனின் வரிகள் உன்னதத்தைத் தொட்டன. சங்கராபரணம் தந்து (1980), கர்நாடக இசைக்கு மக்கள் ரசனையில் இடம் உண்டு என்பதையும், தெலுங்கு திரைப்பட இசையில் தனக்கு ஒரு தனியிடம் உண்டு என்பதையும் காட்டினார் 


மகாதேவன். பாடல்களின் இனிமையைப் போலவே, மகாதேவனுக்கும், அவருடைய உதவி இசை அமைப்பாளரான டி.கே.புகழேந்திக்கும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் நட்பின் ராகம் ஒலித்தது. மிகப்பெரிய வெற்றிகள் நிறைந்த, நெடிய சாதனை சகாப்தத்தை, யார் மனதையும் புண்படுத்தாமல் மகாதேவன் செய்து முடித்தார்.

முதன்மைக் கட்டுரை: கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
விருதுகள்[தொகு]

சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1967, கந்தன் கருணை) (இவ்விருதின் முதல் பெறுநர்)


சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருது (1969, அடிமைப் பெண்)


சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1980, சங்கராபரணம்)


சிறந்த இசையமைப்பாளருக்கான பில்ம்பேர் விருது (தெலுங்கு) (1992, சுவாதி கிரணம்)
கலைமாமணி விருது
மறைவு[தொகு]
கே. வி. மகாதேவன் 2001 சூன் 21 இல் தனது 83வது அகவையில் சென்னையில் காலமானார்.[@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எஸ்.பி.பியை மிரட்டிய இசைமேதை இசைமேதை கே.வி.மகாதேவன் 
36 வருடம் கழித்து வெளிவரும் உண்மை! சுமார் 36 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி ஓராண்டு தொடர்ந்து ஓடி வெற்றி பெற்றதுடன், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசூல் சாதனை புரிந்து நான்கு தேசிய விருதுகளையும் வாங்கி குவித்த படம் தான் ‘சங்கராபராணம்’. கே.விஸ்வநாத் இயக்கி, கே.வி.மகாதேவன் இசையமைத்த தற்போது இந்தப்படம் டி.டி.எஸ் மற்றும் டிஜிட்டல் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த 12 பாடல்களும் நவீன தொழில்நுட்பத்துடன் அதேசமயம் மாறாத இசையுடன் உருவாகி இருகின்றன. 36 வருடங்களுக்கு முன் அந்த ‘சங்கராபரணம்’ படத்தில் பாடிய எஸ்.பி.பி, ஜானகி, வாணி ஜெயராம் மூவரும் இந்தப்படத்தில் பாடியுள்ளனர்.இதுபற்றி எஸ்.பி.பி சொல்லும்போது

“இந்தப்படம் தெலுங்கில் உருவானபோது நான் பல படங்களில் பிசியாக பாடிக்கொண்டிருந்த நேரம்.. அப்போது என் வீட்டிற்கு வந்த 

இசைமேதை கே.வி.மகாதேவன் அண்ணா என் தந்தையிடம் ஒழுங்கா அவனை இந்தப்படத்துல பாடிக்கொடுத்துட்டு மற்ற படத்துல பாடச்சொல்லுங்க என அன்பாக மிரட்டினார். 

என் தந்தையும் அவனுக்கு நல்லா பாடவரலைன்னா அவன் கன்னத்துல அறைந்து பாடவைங்க என்றார். 

அதன்பின் இந்தப்பாடலுக்காக மிகவும் பயிற்சி எடுத்து பாடினேன். அதுதான் எனக்கு தேசியவிருதையும் வாங்கித்தந்தது” என்கிறார் பெருமிதத்துடன்.அபூர்வ சகோதரர்கள் -விகடனின் கார்ட்டூன்அபூர்வ சகோதரர்கள் -விகடனின் கார்ட்டூன் 

1949 தீபாவளி ரிலீசாகி வெளி வந்தது அபூர்வ சகோதரர்கள் என்ற ஜெமினியின் திரைப்படம் .1950 குடியரசு ஆகும் நேரத்தில் ஆந்திரா காரர்கள் 
சென்னையை தமிழ் நாட்டில் இருந்து பிரித்து தரும்படி கேட்டார்கள் 

இந்த திரைப்படத்தின் மைய கரு யாதெனில் ஒட்டி பிறந்த இரட்டையர் இருவரில் ஒருவர் உணர்ச்சி வசப்படும் போது இன்னொருவருக்கும் அதே உணர்வு ஏற்படும் .அண்ணன் காதலித்தால் தம்பி உணர்ச்சியால் துடிப்பான .இது கார்ஸிகான் பிரதர்ஸ் என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது   

இதில் எம் கே ராதா இரட்டை வேடத்திலும் பானுமதி கதாநாயகியாகவும் நடித்தனர் .இதுவே நீரும் நெருப்பும் என்ற பெயரில் எஞ்சியார் ஜெயலலிதா நடிப்பில் வெளி வந்தது .அப்போது பரணீதரன் என்பவர் கார்டூனிஸ்ட்டாய்
இருந்தார் .
இந்த சினிமாவையும் ,ஆந்திரா சென்னை பிரட்சனை இரண்டும் சேர்த்து கார்ட்டூன் வரைந்து அப்போதைய ஆனந்தவிகடன் எடிட்டரும் 
நிர்வாகஸ்தருமான எஸ் எஸ் வாசன் அவர்களிடம் காட்டினார்   

இந்த அபூர்வசகோதரர்கள் ஐடியா அவருக்கு பிடித்து விட்டது 
இது எக்ஸலண்ட் ஐடியா தான் .ஆனால் நம்முடைய படத்திற்கு நாமே விளம்பரம் செய்வது போலாகி விடும் .எனவே தினமணியில் வந்தால் அதிகம் பார்ப்பார்கள் என்கிறார் 

அதற்கு பரணீதரன் இந்த கார்ட்டூன் வேறு எந்த பத்திரிக்கையிலும் வெளி வர்றத நான் விரும்பல .வந்தா விகடன்ல வரட்டும் இல்லேன்னா ...வெளிவராமல் போகட்டும் என்கிறார் 
மறுவாரம் அந்த கார்ட்டூன் வந்தது -பரணீதரன் விண்வெளியில் மிதந்தார்   

இயக்குனர் ராமண்ணா வை பின்னால் இருந்து இயக்கியவர் முன்னாள் நடிகையும் ,அவரது மனைவி யான பி .எஸ்.சரோஜாஇயக்குனர் ராமண்ணா வை பின்னால் இருந்து இயக்கியவர் முன்னாள் நடிகையும் ,அவரது மனைவி யான பி .எஸ்.சரோஜா 

எம். ஜி. ஆருடன் கத்தி சண்டை போட்ட பி. எஸ். சரோஜா


என் கணவர் இயக்கிய படங்களில்
 ‘வாழ பிறந்தவள்’, 
‘பெரிய இடத்துப் பெண்’,
 ‘பணக்காரக் குடும்பம்’,
 ‘குலேபகாவலி’,
 ‘பாசம்’, 
‘காத்தவராயன்’,
 ‘கூண்டுக்கிளி’, 
‘தங்கச் சுரங்கம்’, 
‘நான்’, 
‘மூன்றெழுத்து’,
 ‘புதுமைப் பித்தன்’, 
‘சொர்க்கம்’,
 ‘பறக்கும் பாவை’,
 ‘நாடோடி’, 
‘என்னைப்போல் ஒருவன்’ இதெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள் எந்த ஒரு படமானாலும் கதைகளிலும், காட்சிகள் அமைப்பிலும் வித்தியாசமாக ஏதாவது செய்யணும்னு என்னுடைய கணவர் நினைப்பார்.


‘அன்று வந்ததும் அதே நிலா’ அப்படிங்கிற பாடல் காட்சிக்கு எம். ஜி. ஆர். பேண்ட், கோட், ஸ¥ட் போட்டு, வெஸ்டர்டன் டான்ஸ் ஆட வைக்க முயற்சித்தபோது எம். ஜி. ஆர். இதையெல்லாம் என்னோட ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு பிடிவாதம் பிடித்தார். 

அதற்கு என் கணவர், விடாப்பிடியாக எம். ஜி. ஆரைத் தன்னுடைய கற்பனைப்படியே உடைகள் அணிவித்து, நடனம் ஆட வைத்து படம் பிடித்தார். பாட்டும், அந்தக் காட்சியும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதற்குப் பிறகு எல்லா இயக்குநர்களும் தங்கள் படங்களில் எம். ஜி. ஆரை வைத்து ஒரு வெஸ்டர்ன் நடனப் பாடல் அமையும்படி பார்த்துக்கொள்வார்கள். ‘நீங்க ஆரம்பிச்சு வைச்சிங்க எல்லா இயக்குநர்களும் அதையே பிடிச்சுக்கிட்டாங்க....’ன்னு எம். ஜி. ஆர். என்னிடமும் என் கணவரிடமும் சொல்லி மகிழ்ந்தார். அப்போதும் சரி, இப்போதும் சரி என் கணவரை நான்தான் இயக்குநராக்கினேன் என்ற பெருமையும் சந்தோஷமும் என் மனதிற்குள் நிறைந்திருக்கிறது.

எங்களுடைய தயாரிப்பில் வரவு செலவு கணக்கு பணப்பட்டுவாடா இதையெல்லாம் நான்தான் கவனித்துக் கொண்டேன். உழைத்தவர்களின் வியர்வை நிலத்திலே விழுவதற்குள் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிடுவேன். 

எங்களுடைய நிறுவனத்தின் படங்களில் நடித்த 
எம். ஜி. ஆர்., சிவாஜி, &ஜயலலிதா, சரோஜா தேவி, ராமச்சந்திரன் இப்படி எல்லோருக்கும் அவர்களுடைய வீட்டிற்கே போய் பணத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டு வருவேன். அவர்கள் எல்லோரும், இதைப் பார்த்து ஆச்சர்யமும், சந்தோஷமும் அடைவார்கள்.

தோட்டக் கலையில் எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு.
தாம்பரத்தில் 18 ஏக்கரில் பழங்கள், காய்கறிகள், மலர்கள் என்று எல்லா வகையானவற்றையும் பயிரிட்டு தனி கவனம் செலுத்துவேன். 


அடையாரில் இருந்தபோதும், தி. நகரில் வசித்த போதும் வீட்டிலேயே காய்கறி, பழங்கள் பயிரிட்டு வீட்டுக்குத் தேவையானவைகளைப் பயன்படுத்தி வந்தேன். 

1957 களில் மலர் கண்காட்சி போட்டிகளில் கலந்துகொண்டு விருது வென்றிருக்கிறேன்.

என்னுடைய தோட்டக்கலை பராமரிப்பில், நிர்வாகத் திறமை, நடிப்புத் திறமை, கதைகளைக் கேட்டு தேர்வு செய்து நடிப்பது போன்றவற்றையெல்லாம் என்னுடைய கணவரின் சகோதரி டி. ஆர். ராஜகுமாரி உடனுக்குடன் கூப்பிட்டு பாராட்டி மகிழ்வார். 


அருணகிரிநாதர் படத்தில் டி. எம். எஸ்.ஸின் அக்காவாக நடித்த காட்சிகளில் ‘தம்பி திருந்துவதற்காக ஒரு காட்சியில் நான் பேசி, நடித்ததைப் பார்த்து படப்பிடிப்பில் இருந்தவர்கள் எல்லோரும் அழுதே விட்டார்கள். படத்தைப் பார்த்துவிட்டு டி. ஆர். ராஜகுமாரியும் அழுது, புலம்பி என் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். இதை என் வாழ்னாளில் என்றுமே மறக்க முடியாதது.

புதுமைப்பித்தன்’ படத்தில் என்னோடு எம். ஜி. ஆர். கத்தி சண்டை போடும்படியா காட்சி ஒன்றை என் கணவர் ஏற்பாடு செய்துவிட்டார். முதலில் எம். ஜி. ஆர். தயங்கினார். ‘ஒரு பெண்ணோடு கத்தி சண்டை போட வேண்டாம்...’ என்று கூறி, மறுத்தார். இது காட்சிக்குத் தேவை, நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இதில் இடது கையால் கத்தியைப் பிடித்து அவரோடு சண்டை போடுங்கள் பிரமாதமாக இருக்கும். 

உங்கள் ஸ்டைலில் இருந்து இது வித்தியாசப்படும் என்று சண்டைக் காட்சிக்கு விளக்கம் கூறி என்னுடைய கணவர், எம். ஜி. ஆரை சம்மதிக்க வைத்தார்.
நானும் சண்டைப் பயிற்சி மாஸ்டரிடம் நன்றாக பயிற்சி எடுத்துக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்தேன். உண்மையிலேயே அந்தக் காட்சி எனக்கும் எம். ஜி. ஆருக்கும் நல்ல பெயரை தேடித்தந்தது. 

‘கூண்டுக்கிளி’ படத்தில்

 எம். ஜி. ஆர்., சிவாஜி இருவரையும் வைத்து நாங்கள் படம் எடுக்கும்போது அதில் எல்லோரும் உற்சாகமாக நடித்தார்கள். 

வித்தியாசத்தை விரும்பும் என் கணவர் சிவாஜியை எம். ஜி. ஆருக்கு வில்லனாக நடிக்க வைத்தார். என் கணவரிடம் அவர்கள் அண்ணன் தம்பி போலத்தான் பழகி வந்தார்கள். எதைச் சொன்னாலும் அதைச் செய்து கொடுத்தார்கள். இந்தப் படத்தில் இரு திலகங்களையும் சேர்த்து, நடிக்க வைத்த பெருமை என்னுடைய கணவரையே சாரும். சினிமா வரலாற்றில் எங்கள் தயாரிப்பில் ‘கூண்டுக்கிளி’ நிலையானதொரு இடத்தைப் பிடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்!


எங்களுக்கு 
கலாராணி, 
கணேஷ், 
சாந்தின்னு மூன்று செல்வங்கள். 
பேரன், பேத்திகள் ஆறு பேர். 
1997 ல் என் கணவர் இயற்கை எய்தினார். 
அதற்கு முன்பே நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். 

முக்கியமான திரைப்பட விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் யாராவது கலந்துகொள்ளும்படி வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே சென்று வருகிறேன். எனக்கு தெய்வ பக்தி உண்டு. அடிக்கடி உள்ளூர், வெளியூர்களில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்று கடவுளை தரிசனம் செய்து வருகிறேன்’ என்று இனிக்க இனிக்க கூறினார்.‘தேன்மொழியாள்’ பண்டரிபாய் 14 வயதில் நடிக்கத் தொடங்கினார்.

‘தேன்மொழியாள்’ பண்டரிபாய் 14 வயதில் நடிக்கத் தொடங்கினார்.

07 மொழிகளில் 1500 க்கு படங்களில் நடித்து சாதனை படைத்தவர்
‘தேன்மொழியாள்’ பண்டரிபாய் 14 வயதில் நடிக்கத் தொடங்கினார்.

சிவாஜிகணேசனின் முதல் படமான பராசக்தியில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர் பண்டரிபாய். பிறகு அவருக்கு தங்கையாக, அக்காவாக, அண்ணியாக, அம்மாவாகவும் நடித்தார்.

7 மொழிகளில் 1500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார். பண்டரிபாயின் சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்கல் என்ற கிராமம். 1930ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தார். தந்தை ரங்காராவ். தாயார் காவேரிபாய். பண்டரிபாயுடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர்.

பண்டரிபாயின் தந்தை ஓவிய ஆசிரியர். என்றாலும் நாடகத்தன் மீது அபார மோகம். எனவே, வேலையை விட்டு விலகி, நாடகக் கம்பனி ஆரம்பித்தார். எனினும் தன் மகள்கள் யாரும் நாடகத்தில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்தார்.
நாடகம் பற்றிச் பேசக் கூடாது என்று தடை உத்தரவு போட்டிருந்தார். 


நாடகத்துக்கு பதிலாக, மகள்களுக்குக் கதாகாலட்சேபம் கற்றுக் கொடுத்தார். பண்டரிபாய் தன் 10 வயதிலேயே கன்னடத்திலும், மராத்தியிலும் கதாகாலட்சேபம் செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்றார். இவ்வளவு சிறப்பாக காலட்சேபம் செய்கிற பண்டரிபாய் சினிமாவில் நடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று அவரது அண்ணன் நினைத்தார். 
அவர் முயற்சியால் “வாணி” என்ற கன்னட படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு பண்டரிபாய்க்கு கிடைத்தது. ஹரிதாஸ் எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் மெகாஹிட் படத்தில் பண்டரிபாய்க்கு ஒரு சிறு வேடம் கிடைத்தது.

தமிழில் அது தான் அவருக்கு முதல் படம். படத்தின் முதல் காட்சியில் “வாழ்விலோர் திருநாள்” என்று பாடிக் கொண்டே குதிரையில் வருவார் பாகவதர். பெண்களை துரத்துவார். ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் பண்டரிபாயை விரட்டிக் கொண்டு போவார். அவரை துயில் உரிய முயற்சிப்பார். பிறகு ஒரு மோதிரத்தை பரிசளிப்பார்.
இந்தக் காட்சியில் பண்டரிபாய் நடித்தார். அப்போது அவருக்கு வயது 14 தான். 

பிறகு ஏ. வி. எம். தயாரித்த “வேதாள உலகம்” என்ற படத்தில் காளியாகத் தோன்றினார் பிறகு, வைஜயந்தி மாலா கதாநாயகியாக அறிமுகமான “வாழ்க்கை” படத்தில் இரண்டாவது கதாநாயகியாக பண்டரிபாய் நடிப்பதாக இருந்தது. 

ஆனால் தமிழில் சரிவர பேச வராததால் அந்த வேடத்தில் டி. கே. எஸ். நாடகக் குழுவைச் சேர்ந்த எம். எஸ். திரவுபதி நடித்தார்.

 “வாழ்க்கை” படம் “ஜீவிதம்” என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட போது இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.

பண்டரிபாய்க்கு தமிழ் கற்றுக் கொடுக்க பி. டி. சம்பந்தம் என்ற நடிகரை ஏ. வி. எம். நிறுவனம் ஏற்பாடு செய்தது. 
SIVAJI WITH P.D.SAMBANTHAM

என்றாலும் பண்டரிபாயிடம் இருந்து தமிழ் வார்த்தை தெலுங்கில் தான் வந்தது .பி டி சம்பந்தம் பண்டரிபாயிடமிருந்து தெலுங்கை கற்றுக்கொண்டது தான் மிச்சம் .பின்னர் சகஸ்ரநாமத்திடம் தமிழ் கற்றார்    


விரைவிலேயே தமிழில் அழகாக வசனம் பேச பண்டரிபாய் கற்றுக் கொண்டார். ஏ வி. எம். கூட்டுறவுடன் நேஷனல் பிக்சர்ஸ் 1952 இல் தயாரித்த பராசக்தி படத்தில், சிவாஜியின் ஜோடியாக பண்டரிபாய் நடித்தார். சின்ன வேடங்களில் நடித்த படங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் பண்டரிபாய் முக்கிய வேடத்தில் நடித்த முதல் தமிழ்ப் படம் பராசக்தி தான். அதில் சிறப்பாக நடித்ததுடன் கலைஞரின் வசனங்களை தெளிவாகவும், இனிமையாகவும் பேசி தேன்மொழியாள் என்று போற்றப்பட்டார். 

தொடர்ந்து சிவாஜிகணேசனுடன் பல படங்களில் பண்டரிபாய் நடித்தார். “கண்கள்” படத்தில் தங்கை, “திரும்பிப்பார்” படத்தில் அக்காள், “அந்தநாள்” படத்தில் மனைவி..... இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார்.

நடிகர் பாலாஜி - பல காதலுக்குபச்சை கொடி காட்டியவர்


நடிகர் பாலாஜி - பல காதலுக்குபச்சை கொடி காட்டியவர்   


பாலாஜியின் அப்பா கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார் கிரிஷ்ணமாச்சாரியின் இரண்டாவது தாரம் மலையாள பெண். இந்த இரண்டாவது தாரத்தின் மகன் தான் பாலாஜி. இப்படி அபிமான தாரத்தின் மகனாக பிறந்ததால் அனுபவிக்க நேர்ந்த துயரங்களை பாலாஜி திரும்பி பார்த்தபோது;ஜெமினி கணேசனின் உற்ற நண்பர், பாலாஜி


நாகேஷ் திரையுலகில் நுழைய காரணமானவர் பாலாஜி. 

இவருடைய நாடகத்தில் நடித்த ரெஜினா பின் நாகேஷ் மனைவியானார். 

‘படித்தால் மட்டும் போதுமா’வில் சிவாஜிக்கு அண்ணனாக
 ‘பலே பாண்டியா’வில் கூட சிவாஜியுடன் நடித்திருந்தாலும்
 ஜெமினி கணேசனின் சிபாரிசில் தான் சிவாஜியை இவர் 
தயாரிப்பில் நடிக்க வைக்க நெருங்க முடிந்தது. 

நடிகராக திரையில் கதாநாயகனாக, 
இரண்டாவது கதாநாயகனாக, 
கொமெடியனாக, 
வில்லனாக நடித்தவர். 

இவருடைய ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருக்கும். 
நரசுஸ் ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாய் வேலை 
பார்த்துக்கொண்டே ‘பிரேமபாசம்’ படத்தில் ஜெமினிக்கு
 தம்பியாய் நடிக்கும் போது ஜெமினி கணேசனின் 
மூன்றாவது திருமணத்திற்கு உதவியவர், 

ஜெமினி - சாவித்திரி சரசத்திற்கு காவல் நின்றவர் பாலாஜி.

ஒப்பனை அறையில் சாவித்திரிக்கு மொக்கை போடும் போது ஜெமினி 
‘டே பாலாஜி சாவித்திரி அப்பா வாரானா பார்ரா. வந்தா உடனே சிக்னல் கொடு’ 


வேலாயுதம் தன் இரண்டாவது மனைவியாக நடிகை கே. ஆர். விஜயாவை 
திருமணம் செய்யவும் துணை நின்றவர் தான் பாலாஜி.
 பி. பி. ஸ்ரீனிவாசனின் பல ஹிட் பாடல்கள் இவருக்கு கிடைத்தது.

‘ஆண்டடொன்று போனால் வயதொன்று போகும்’
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்! 
நெருப்பாய் எரிகிறது’
‘பண்ணோடு பிறந்தது கானம் குல பெண்ணோடு 
பிறந்தது நாணம்’
‘நல்லவன் எனக்கு நானே நல்லவன்’
‘பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை’
‘ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்!’
‘உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே நீ சிரிக்காயோ’
‘இரவு முடிந்து விடும், முடிந்தால் பொழுது புலர்ந்து விடும்’

ஜெயலலிதா போராட்டமான தன் அரசியல் சூழலிலும் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டார்.

 அந்த கண்ணீர் உண்மையிலே சுத்தமானது. அவர் சொன்னது கூட மிகை இல்லை. அவருடைய அண்ணனை இழந்துவிட்டார். பாலாஜி பற்றி மறுபக்கமாக சில விஷயங்கள் உண்டு. 

அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயனாக நடித்து வருகிறேன்.-ரஜினி நண்பர்களுக்கு எழுதிய கடிதம்


அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயனாக 
நடித்து வருகிறேன்.-
ரஜினி நண்பர்களுக்கு எழுதிய கடிதம் அபூர்வ ராகங்கள்  படத்தில் தான் நடிப்பது பற்றி, பெங்களூரில் உள்ள தன் நண்பர்களுக்கு ஏற்கனவே ரஜினி கடிதம் எழுதியிருந்தார்.


அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயனாக நடித்து வருகிறேன். திரைப்படக் கல்லூரியில் 36 பேர் படித்த போதிலும், டைரக்டர் பாலசந்தரின் பார்வை என் மீது மட்டுமே பட்டது. எனவே, எனக்குக் கதாநாயகன் வாய்ப்பைத் தந்திருக்கிறார் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.


இது பற்றி ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கூறியதாவது,
அபூர்வராகங்களில் சின்ன வேஷத்தில்தான் நான் நடித்தேன். அதைச் சொன்னால், இதற்காகவா 2 வருஷம் படித்துக் கிழித்தாய்! என்று நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்று நினைத்தேன். அதனால் நான் தான் கதாநாயகன் என்று சும்மா ரீல் விட்டேன்.


1 வருடம், 1 1/2 வருடம் கழித்துதான் அபூர்வராகங்கள் பெங்களூருக்கு வரும் என்று நினைத்து தைரியமாக அப்படிச் சொன்னேன்.
என்னுடைய  துரதிர்ஷ்டம், படம் 2 மாதத்திலேயே பெங்களூருக்கு வந்துவிட்டது. அப்போது நான பெங்களூரில் இருந்தேன். என் நண்பர்களுக்கு ஒரே குஷி எனக்கோ தர்மசங்கடம். என்ன செய்வது என்று தெரியவில்லை.


அபூர்வராகங்கள் படம் ரிலீஸ் ஆன அன்று, முதல் காட்சிக்கே என் நண்பர்கள் எல்லோரும் போனார்கள். இந்தப் படத்தின் ஹீரோ, எங்கள் பிரண்ட்தான்! என்று கூறி, எல்லோருக்கும் சுவீட் கொடுத்தார்கள்.


அவர்கள் பலூன்களை ஊதி, கையில் வைத்திருந்தார்கள். நான் திரையில் தோன்றியதும், பலூன்களை படார், படார் என்று உடைத்து என்னை வரவேற்கத்தான்! 

படம் ஆரம்பம் ஆச்சு. டைட்டிலில் சிவாஜிராவ் என்ற பேரைத் தேடுறாங்க. அந்தப் பெயர் வரவில்லை. ரஜினிகாந்த் என்ற பெயர் வருது. அது நான்தான் என்று அவர்களுக்குத தெரியவில்லை.

படம் ஓடிக்கிட்டே இருக்கு. திரையில் என்னைக் காணோம். 

இடைவேளையும் வந்துவிட்டது.

நான் அவர்கள் கண்ணில் படாமல் மெல்ல நழுவிவிட்டேன். படத்தில் நான் இல்லை என்ற முடிவுக்கு நண்பர்கள் வந்துவிட்டார்கள். 

இருந்தாலும் ‘படம் நல்லா இருக்கு. முழுவதையும் பார்த்துவிட்டு போகலாம்’ என்று உட்கார்ந்திருந்தார்கள். பலூனில் காற்றை இறக்கி விட்டு பக்கெட்டில் போட்டுக்கொண்டார்கள்.


இடைவேளை முடிந்து படம் ஆரம்பம் ஆச்சு.
இரண்டு கதவையும் தள்ளிவிட்டு ஒருவன் உள்ளே நுழைகிறான். தாடி, மீது பழைய கோர்ட்டு, ‘எங்கேயோ பார்த்த முகம் மாதிரி இருக்கே’ என்று நண்பர்கள் நிமிர்ந்து உட்காருகிறார்கள்.

கொஞ்ச நேரம் போனதும், 
அது நான்தான் என்பது தெரிகிறது. 
நண்பர்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. 
பலூனை எடுத்து ஊதி, ‘டப் டப்’ என்று உடைச்சாங்க.
அதேநேரத்தில் கமலஹாசனோட முகமும் திரையில் தெரியும். 


தியேட்டருக்கு வந்திருந்தவர்கள், ‘கமலஹாசன் ரசிகர்கள்தான் பலூனை வெடிக்கிறார்கள்’ என்று நினைத்துக்கொணடார்கள். பெங்களூரில்கூட கமலஹாசனுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களே’ என்று ஆச்சரியப்பட்டாங்க.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


‘அபூர்வராகங்கள்’ சிக்கலான கதை. விக்கிரமாதித்தன் கதையில், வேதாளம் போடும் விடுகதையை அடிப்படையாக வைத்து, புதுபாணியில் இதை பாலசந்தர் எழுதியிருந்தார்.

படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் அப்பா, கமலஹாசன் மகன். 
கமலஹாசன் ஸ்ரீவித்யாவை காதலிக்க, ஸ்ரீவித்யாவின் மகளான ஜெயசுதாவை மணக்க மேஜர் சுந்தர்ராஜன் முடிவு செய்வார்.


படம் கிளைமாக்கை நெருங்கும்போது, ‘நான் தான் பைரவியின் (ஸ்ரீவித்யா) புருஷன்’ என்று சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் திடீர் பிரவேசமாக நுழையும்போது, கதையில் பெரும் திருப்பம் ஏற்படும்.
இந்தக் கதையை மக்கள் ஏற்பார்களா? படம் ஓடுமா? என்று டைரக்டர் பாலசந்தர் உட்பட பலருக்கும் சந்தேகம் இருந்தது.

எனினும் படம் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததால், நூறு நாட்களைக் கடந்து ஓடியது.  


படத்தின் நூறாவது நாள் விழாவில் அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு, படத்தில் பங்குகொண்ட கலைஞர்களுக்கு கேடயங்கள் வழங்கினார். 

அவர் வேறொரு முக்கிய நிகழ்ச்சிக்குப் போகவேண்டி இருந்ததால், டைரக்டர் பாலசந்தர், கதாநாயகன் கமலஹாசன், கதாநாயகி ஸ்ரீவித்யா உட்பட சிலருக்கு மட்டும் கேடயங்களை வழங்கி விட்டு, அடுத்த நிகழ்ச்சிக்குப் போய்விட்டார்.

ரஜினிகாந்துக்கும் மற்றவர்களுக்கும் ஏவி.எம். அதிபர் மெய்யப்ப செட்டியார் தான் கேடயங்களை வழங்கினார்.

முதல்வரிடம் கேடயம் வாங்க முடியவில்லையே என்ற மனக்குறை ரஜினிக்கு நீண்டகாலம் இருந்தது. ‘முத்து’’ படத்தில் சிறப்பாக நடித்ததற்கான தமிழக அரசின் பரிசை கலைஞரிடம் பெற்றபோது அந்த மனக்குறை தீர்ந்தது.

“நல்ல வில்லனா வரணும் என்று ஆசிர்வாதம் செய்யுங்க’ - சிவாஜிராவ் என்ற ரஜினி
“நல்ல வில்லனா வரணும் என்று ஆசிர்வாதம் செய்யுங்க’ 
சிவாஜிராவ் என்ற ரஜினி வில்லன் எதுக்கப்பா’ நீ பெரிய நடிகனாக வருவே 
பார்த்துக் கொண்டே இரு
கே.பாலசந்தர் 


அபூர்வராகங்கள் படத்தில் நடித்து முடிக்கும்வரை சிவாஜிராவ் ஆக இருந்தவர். பிறகு ரஜினிகாந்த் ஆக மாறினார். புதிய பெயரை சூட்டியவர் டைரக்டர் கே. பாலசந்தர். இதுபற்றி ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:-


அபூர்வராகங்கள் படத்திற்காக, நான் இன்னொரு காட்சியில் நடித்தேன். நானும், ஸ்ரீவித்யாவும் பங்குகொள்ளும் லவ் சீன் இரண்டு பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடித்துக்கொண்டு, சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் வரவேண்டும். அக்காட்சியில் வசனம் கிடையாது. வெறும் உதட்டசைவு மட்டும்தான்.இதனால், உங்கள் இஷ்டப்படி ஏதாவது பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் நடந்து வாருங்கள் என்று சொன்னார்கள். நான் கன்னடத்தில் பேச ஸ்ரீவித்யா மலையாலத்தில் பேசினார். இந்தக் காட்சி முடிந்தது. ‘நீங்க வீட்டுக்குப் போகலாம்’ என்றார்கள். நான் மேக்கப்பைக் கலைத்துவிட்டு வெளியே வந்தேன். அபூர்வராகங்கள் படப்பிடிப்பு அத்துடன் முடிவடைந்தது.

என் காட்சிகளுக்கு வசனம் பேச (டப்பிங்) ஜெமினி ஸ்டூடியோவுக்குப் போனேன். அப்போது கமல்ஹாசனும், ஸ்ரீவித்யாவும் ‘டப்பிங்கில்’ வசனம் பேசிக்கொண்டிருந்தார்கள்.


என்னுடைய காட்சி எப்போது வரும் என்று காத்திருந்தேன். திடீரென்று திரையில் ஒரு காட்சி கோட்டு போட்ட ஒரு தாடி ஆசாமி கதவைத் திறந்து கொண்டு வருகிறான். ஏதோ பேசுகிறான். என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது அது நான்தான் என்று.

என்னை மறந்து அந்தக் காட்சியைப் பார்க்கிறேன். அதே காட்சி சுற்றிச்சுற்றி வருகிறது. வசனம் பேசுவதை மறந்து அதையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
 என் உருவத்தைத் திரையில் பார்த்த போது உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சி இதற்காகத்தானே இவ்வளவு நாள் காத்துக்கிட்டிருந்தேன்.

இதை கவனித்துக் கொண்டிருந்த டைரக்டர் பாலசந்தர் சேர் ‘என்ன! வசனத்தைப் பேசலாமா?’ என்று கூறியதும், நான் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தேன்.

இந்த சமயத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். எனக்கு தமிழ் சரிவரத் தெரியாததால் வேறு யாரையாவது எனக்குக் குரல் கொடுக்கச் சொல்லலாம் என்று சிலர் கூறினார்கள். 


பாலசந்தர் சேர் அதை ஏற்கவில்லை. கூடவே கூடாது ஒரிஜினல் வொய்ஸ்தான் வேண்டும்’ என்று கூறிவிட்டார். அபூர்வராகங்களில் எனக்கு வசனம் கொஞ்சம்தான். அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பாலசந்தர் சேர் சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே பேசினேன். அதை டைரக்டர் ‘ஓகே’ செய்தார். டப்பிங் வேலை முடிந்தது. இவ்வாறு குறிப்பிட்ட ரஜினிகாந்த், தனக்கு அந்தப் பெயர் வந்தது பற்றி சொன்னதாவது:-

1975 ஆகஸ்ட் 15ம் திகதி அபூர்வராகங்கள் படம் வெளிவரும் என்று திகதி குறிப்பிடப்பட்டது.


பாலசந்தர் சேர் என்னை அழைத்தார். ‘டைட்டிலில் பெயர் போட வேண்டும். சிவாஜிராவ் என்ற பெயர் வேண்டாம். ஏனென்றால் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருப்பதால், சிவாஜி என்ற பெயர் வேண்டாம். ‘ராவ்( என்கிற பெயரும் தமிழ்நாட்டுக்குப் பெருந்தாது என்றார். 

“நீங்கள் ஏதாவது பெயர் சொல்லுங்க சேர்” என்று கூறிவிட்டுத் திரும்பினேன். என் நண்பர்களிடம் கலந்து ஆலோசித்தேன்.
‘சரத்’ 
‘ஆர். எஸ். கெய்க்வாட்’ 
என்று இரண்டு பெயர்கள் என் மனதில் இருந்தன. அதைச் சொன்னேன். நண்பர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ‘நன்றாக இல்லை’ என்று கூறினார்கள்.

மறுபடியும் பாலசந்தர் சேர் கிட்டப் போய் நீங்களே ஆசிர்வாதம் செய்து ஒரு பெயர் வையுங்க! என்றேன். அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். பெளர்ணமி தினம்.


பாலசந்தர் சேர் சொன்னார். என்னுடைய மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் சந்திரகாந்துக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் ஸ்ரீகாந்த், மற்றவன் ரஜினிகாந்த். ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஏற்கனவே ஒருவருக்கு வைத்தாகிவிட்டது. ரஜினிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று ரொம்ப நாளா நினைத்துக் கொண்டிருந்தேன். அதை உனக்கு வைக்கிறேன்.

இவ்வாறு பாலசந்தர் சொன்னதும், அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டேன். “நல்ல வில்லனா வரணும் என்று ஆசிர்வாதம் செய்யுங்க’ என்றேன். ‘வில்லன் எதுக்கப்பா’ நீ பெரிய நடிகனாக வருவே பார்த்துக் கொண்டே இருஎன்றார் பாலசந்தர் சேர்.


எனக்குத் தாங்க முடியாத உற்சாகம். நேராக மெரீனா கடற்கரைக்கு ஓடினேன். கடற்கரை மணலில் உட்கார்த்து நீலக்கடலை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு மனக்கஷ்டம் வந்தாலும் உற்சாகம் வந்தாலும் கடற்கரைக்குச் சென்று தனியாக உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கிவிடுவேன்.
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
1975ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம்திகதி அபூர்வராகங்கள் ரிலீஸ் ஆயிற்று.
மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம். பாலசந்தர் தன் படங்களில் தனி முத்திரை பதித்துக் கொண்டிருந்த காலக்கட்டம்.எனவே, அதை டைரக்டர் படமாகத்தான் ரசிகர்கள் நினைத்தார்கள்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரிலும் இப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. படம் பார்க்கப் போனார் ரஜினி. டிக்கெட் கிடைக்கவில்லை.

தியேட்டர் மனேஜரை சந்தித்து நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் எனக்கு ஒரு டிக்கெட் வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அவரை மேலும் கீழுமாகப் பார்த்த மனேஜர் இரக்கப்பட்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்.
துள்ளிக்குதித்து ஓடிய ரஜினி திரையில் தன் உருவத்தைப் பார்த்து மகிழ்ந்தார். நம்கனவு நிறைவேறிவிட்டது. வில்லன் வேடங்களாவது தொடர்ந்து கிடைக்கும்” என்று நினைத்தார்